தாஹ்மஹால்..... அடிப்படையில் ஒரு கல்லறை. ஆம்.... மும்தாஜ் என்ற அரசியின் சமாதி! இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களிலேயே கலைகளில் அதிக அக்கறையும், ஆர்வமும் கொண்டவர் ஷாஜஹான். இவரது 2வது மனைவி மும்தாஜ். இவர் இந்திய மண்ணில் பிறந்தவர் அல்ல.பெர்ஷியா நாட்டில் பிறந்தவர்.
மும்தாஜின் இயற்பெயர் அர்ஜீமந்த் பானு.ஷாஜஹானின் இயற்பெயர் ஷஹாபுதின். அர்ஜீமந்த் பானுவின் அழகில் மயங்கிய ஷஹாபுதின் கி.பி 1612இல் திருமணம் செய்துகொண்டார். பழங்கால முஸ்லிம் அரச வழக்கப்படி, திருமணத்தின் போது இவருக்கும் பெயர் மாற்றப்பட்டது. பானு,மும்தாஜ் ஆனார். ஷஹாபுதின், ஷாஜஹானாக மாறினார்.
திருமணத்திற்கு பின் இருவரும் ஒருநாள் கூட பிரிந்ததே இல்லை. ஷாஜஹான்போருக்கு கிளம்பினாலும், தனது மனைவியை பிரிய மனமின்றி தன்னுடன் அழைத்து செல்வார்.
வரலாற்று சான்றுகளின் படி மும்தாஜே இப்படி ஒரு அழகான கல்லறை வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். கி.பி 1631இல் பர்ஹான் என்ற இடத்தில் ஷாஜஹானுக்கு எதிராக கிளர்ச்சி நடந்துள்ளது. அந்த கிளர்ச்சியை அடக்க, ஷாஜஹானே முன்னின்று செல்ல திட்டமிட்டான். அப்போது மும்தாஜ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். 14வது குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து கொண்டு இருந்தாள். இதனால் மும்தாஜை உடன் அழைத்து செல்ல ஷாஜஹான் தயங்கினான். ஆனால் மும்தாஜே எதையும் பொருட்படுத்தாமல் மன்னனுடன் கிளம்பிவிட்டாள்.
இன்றைக்கு மாதிரி எந்த வசதியும் அப்போது இல்லை. எல்லாமே தரைவழி பயணம் தான். நீண்ட தூரபயணம்....... அதனால் ஏற்பட்ட சிரமங்கள், போர்களத்தில் அடைந்த தொல்லைகள் என தொடர,நிறைமாத கர்ப்பிணியால் தாங்க முடியவில்லை.
இந்நிலையில் பிரசவம் நடக்க..... குழந்தை பிறந்தவுடன் மும்தாஜின் உயிர் பிரிந்துள்ளது. உயிர் பிரியும் முன், ஷாஜஹானிடம் நான்கு சத்தியங்களை வாங்கி கொண்டாள். ஒன்று, தனக்கு ஒரு அழகான கல்லறை எழுப்ப வேண்டும். இரண்டு, ஷாஜஹான் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டும். மூன்று, தனது குழந்தைகளை இறுதிவரை பாசத்துடன் பாதுகாக்கவேண்டும். நான்கு, தன்னுடைய நினைவு நாளன்று தனது கல்லறைக்கு வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டாள்.
இராமயணத்தில் கைகேயிடம் கொடுத்த சத்தியத்துக்காக தசரதன் எப்படி இம்சைபட்டானோ, அதேபோல் ஷாஜஹானும் அவஸ்தைபட்டன். தனது சொந்த மகனான அவுரங்கசீப், தன்னை சிறையில் தள்ளியபோது, காதல் மனைவியின் சத்தியத்துக்கு கட்டுபட்டு அமைதியாக இருந்துவிட்டான்! சிறையில் இருந்தபடி, சிறிய ஜன்னல் வழியே தாஜ்மஹலை பார்த்தவாறு தனது இறுதி காலத்தை கழித்தான். இறுதியில் தனது காதல் மனைவியின் கல்லறையிலேயே உயிரையும் விட்டன் ஷாஜஹான்.
தாஜ்மஹால் யமுனை ஆற்றங்கரையின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கிறது. கல்லறையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்காமல் ஆக்ரா கோட்டைக்கு பக்கத்திலே கட்டப்பட்டுள்ளது. 186 அடிக்கு 186 அடி அளவில் அமைக்கப்பட்டுள்ள தாஜ்மஹாலின் நடுவில் 58 அடி விட்டம் கொண்ட மையகோபுரம் ஒன்று 213 அடி உயரம் வரை உயர்ந்து நிற்கிறது.
இதன் கிழே மும்தாஜின் கல்லறை அமைந்துள்ளது. தாஜ்மஹால் இரண்டு அடுக்கு கொண்ட கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. மேடையில் இருந்து தரைதளத்திற்கு இறங்கி செல்ல படிகள் அமைகப்படுள்ளன. படிகள் வழியே இறங்கினால், மும்தாஜ் மற்றும் ஷாஜஹான் இருவரதும் கல்லறைகள் அமைந்துள்ளன. தாஜ்மஹாலை உருவாக்கிய ஷாஜஹான், தாஜ்மஹாலில் மும்தாஜை தவிர யாருக்கும் இடம் ஒதுக்கவில்லை. ஏன் தனக்கே கூட இடம் ஒதுக்கவில்லை. ஆனால் ஷாஜஹான் இறந்ததும் தாஜ்மஹாலிலேயே புதைத்து இறந்த பிறகும் இணைத்து வைத்து விட்டனர்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கட்டப்பட்ட தாஜ்மஹாலில், இந்திய கலாசாரம் முதல் பெர்ஷிய,அரேபிய கலாசாரம் வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளன. ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் இதற்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். தலைமை வடிவமைப்பாளர் இஸ்தாத் உசா ஈரான் நாட்டை சேர்ந்தவர். 1648 இல் கட்டி முடிக்கப்பட்ட தாஜ்மஹாலுக்கு அப்போதே 3.2 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
வெள்ளை பளிங்கு கற்கள் கொண்டு இதன் வெளிப்புறம் கட்டப்பட்டுள்ளதால் காலையில் உதயமாகும் சூரியனின் கதிர் பட்டு செங்காவி நிறத்தில் காணப்படுவதோடு, மாலையில் வெள்ளையாகவும் இரவில் நிலா வெளிச்சத்தில் தகதகவென தங்கமாய் ஜொலிக்கிறது தாஜ்மஹால்.









0 comments:
Post a Comment