இந்தச்சுவர் டில்லியில் இருந்தும் உரோம் நகரத்து விமானம் மூலம் பறந்தால்கூட இந்த தூரத்தை விட குறைவான தூரம்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த சுவர் ஒரே நேர் கோடாய் இல்லாமல் அங்கங்கே வளைந்து, நெளிந்து, சுருண்டு, பள்ளத்தில் விழுந்து, மீண்டும் சில இடங்களில் மலையேறி.....என எல்லா ஜாலங்களையும் காட்டி கொண்டே தொடர்வதால் குறைந்த நிலபரப்பிலே அடங்கிபோய் இருக்கிறது.
மற்ற எந்த அதிசயமும் போலன்றி இதை கட்டி முடிக்க 1800 ஆண்டுகள் பிடித்தன என்பதே இன்னொரு கவனிக்கதக்க அம்சமாகும்.கி.மு 221இல் தொடங்கி இந்த சுவர் கட்டுமாணம் கி.பி 1644 வரை நீண்டதாக இந்த சுவர் சரித்திரம் சொல்கிறது. அதாவது சீனாவை வெவ்வேறு கால கட்டங்களில் ஆண்ட மூன்று பேரரசுகளின் வாரிசுகள் பலரும் இந்த சுவரின் முக்கியத்துவம் அறிந்து இதில் கவனம் செலுத்தினர்.
காலச்சூழல் மாறியபடியே, அடுத்தடுத்த சந்ததிகளின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு ஏற்றபடி, இந்த சுவரின் பகுதிகளிலும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என பலவற்றிலும் முன்னேற்றங்கள் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அது சரி... இப்படி காலம் காலமாக அடுத்தடுத்து வந்த பலரும் எதற்காக இப்படி ஒரு நீளச் சுவரை எழுப்பக் கங்கணம் கட்டியது போல செலவிட்டார்கள் என்ற கேள்வி எழுகிறதா? இந்தச் சுவருக்கான அவசியம் அப்போது இருந்து இருகிறதே!
இன்றைய உலகமய வர்த்தக சூழ்நிலையில், 'வேறு வழியில்லை' எனப் புரிந்து கொண்ட சீனா தங்களது கம்யூனிஸக் கட்டுபாட்டுகளில் பல மாற்றங்களைச் செய்துகொண்டு பொருளாதார கொள்கை வட்டங்களை உடைத்து கொண்டு வெளியே வர முயன்றதும்- உலக நாடுகள், உலகச் செல்வம் என எல்லாம் அங்கே பாய்வது போலத்தான், அந்நாளிலும் ஒரு பாய்ச்சல் சீனாவை நோக்கி! ஆனால் அன்று பாய்ந்தது சீனாவின் எதிரிகள். சீனாவில் இருந்த செல்வ செழிப்பைக் கொள்ளை அடிக்க, இவர்கள் வரிசையாக அடுத்தடுத்து பாய்ந்தவர்கள். ஓய்வின்றி எந்நாளும் இவர்களுடன் போரிட்டு கொண்டு எல்லைகளை காத்துக்கொள்ளவே நேரத்தை செலவிட வேண்டியுள்ளது என எண்ணிய அந்நாளைய சீன மன்னர்கள் எதிரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி எழுப்பியதுதான் இந்த சுவர்.
ஆனால் இன்றைக்கு உலக அதிசயமாக திகழும் இந்தசுவரே சுற்றுலா விரும்பிகளைக் கவரும் அளவு சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியதாக திகழ்வதுடன், உலக நாடுகள் பலவற்றிலிருந்து இந்நாட்டுக்கு தேவையானஅந்நிய செலாவணியையும் ஈட்டித்தரும் கற்பகவிருட்சமாகவும் விளங்குவது கவனிக்கத்தக்கது.








0 comments:
Post a Comment